அஞ்சல் துறையானது, மாறுதல்களை உண்டாக்கும் வகையிலான ‘உங்கள் DIGIPIN எண்ணினை அறிந்து கொள்ளுங்கள்’ மற்றும் ‘உங்கள் அஞ்சல் குறியீட்டு எண்ணை (PIN) அறிந்து கொள்ளுங்கள்’ எனப்படும் இரண்டு எண்ணிமத் தளங்களை அறிமுகப் படுத்தி யுள்ளது.
DIGIPIN (எண்ணிம அஞ்சல் குறியீட்டு எண்) என்பது ஒரு தடையற்ற மூலமான, பல்வேறு தளங்களுக்கிடையே இயங்கக் கூடிய, புவிசார் குறியீடு கொண்ட, கட்டமைப்பு சார்ந்த எண்ணிம முகவரி அமைப்பு ஆகும்.
இது ஐதராபாத்தில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் மற்றும் இஸ்ரோவின் NRSC உடன் இணைந்து அஞ்சல் துறையால் உருவாக்கப்பட்டது.
1972 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆறு இலக்க PIN குறியீடு அமைப்பு ஆனது, இந்தியாவின் அஞ்சல் விநியோகத்தின் முதுகெலும்பாக செயல்பட்டது.
இந்த தளங்களைப் பயன்படுத்துவதன் மூலம், பயனர்கள் தங்கள் இருப்பிடத்தின் அடிப்படையில் சரியான PIN குறியீட்டை அடையாளம் காண முடியும்.