TNPSC Thervupettagam

‘She Feeds the World' திட்டம்

February 27 , 2023 893 days 423 0
  • இந்தியாவில் பெப்சிகோ மற்றும் கேர் (CARE) ஆகிய நிறுவனங்கள் இணைந்து 'She Feeds the World' திட்டத்தினைத் தொடங்கியுள்ளன.
  • இத்திட்டமானது, முதலில் மேற்கு வங்காளத்தின் கூச்பெஹார் மற்றும் அலிபுர்துவார் ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
  • இது 48,000 பெண்களின் நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைவார்கள்.
  • இது பயிர் விளைச்சலை அதிகரிப்பது, வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள குடும்பங்களில் பெண்களின் வருமானத்தை அதிகரிப்பது, ஆரோக்கியமான மற்றும் சமச்சீர் உணவுக்கான அணுகலை உறுதி செய்வது மற்றும் நீடித்த வேளாண்மை குறித்துப் பெண்களுக்குப் பயிற்சி அளிப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்