கூகுள் இந்தியா நிறுவனமானது இந்தியாவில் சிறிய மற்றும் உள்ளூர் வர்த்தகத்திற்கு ஆதரவளிப்பதற்காக “சிறியதை வலுவாக மாற்றுதல்” என்ற ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
இது சிறிய வர்த்தகங்களுக்காக வேண்டி குடிமக்களிடமிருந்து ஆதரவைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
குடிமக்கள் உள்ளூர் பொருட்களை வாங்குதல், கருத்துகளைப் பதிவிடுதல், தரநிலைப் பற்றிக் கூறுதல் மற்றும் சமூக ஊடகத்தில் தங்களுக்குப் பிடித்த வர்த்தகர்களை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் சிறுவர்த்தகத்திற்கு உதவ முடியும்.