“நிலத்தடி நீர்: ஒரு மதிப்புமிக்க ஆனால் குறைந்து வரும் வளம்” என்ற அறிக்கை
March 25 , 2023 880 days 404 0
நீர்வளத்துறைக்கான நிலைக்குழுவானது நாடாளுமன்றத்தில் இந்த அறிக்கையினைத் தாக்கல் செய்துள்ளது.
2020 ஆம் ஆண்டு வரையில் இந்தியாவில் இருந்த, வருடாந்திரமாக நிலத்திலிருந்து எடுக்கக் கூடிய வகையில் 398 பில்லியன் கன மீட்டர் (BCM) என்ற அளவிலான மொத்த நிலத்தடி நீர் ஆதாரத்திலிருந்து, 245 BCM நீர் பிரித்தெடுக்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டில் 63.3 சதவீதமாக இருந்த நிலத்தடி நீர் எடுப்பு அளவானது 2020 ஆம் ஆண்டில் 61.6 சதவீதமாக குறைந்துள்ளது.
2017 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் டெல்லி, காசியாபாத், ஃபரிதாபாத் மற்றும் 20 இதர நகரங்களில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் ஆனது 20 மீட்டருக்கும் மேலாக குறைந்துள்ளது.
ஹரியானாவின் ஃபரிதாபாத் நகரமானது 100 சதவீதம் நிலத்தடி நீரைச் சார்ந்தே உள்ளது.
பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகியவை முறையே 97%, 90% மற்றும் 86% நிலத்தடி நீரை வெளியே எடுத்து வருகின்றன.
கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை, நிலத்தடி நீரைப் பாசனத்திற்காக என்று முறையே 89%, 92% மற்றும் 90% என்ற கணிசமான அளவில் பயன்படுத்துகின்றன.