TNPSC Thervupettagam

“பசுமை நடவடிக்கையின் TOP லிருந்து TOTAL” என்ற திட்டத்தின் கீழ் பழங்கள் மற்றும் காய்கறிகள்

September 13 , 2020 1809 days 618 0
  • ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்துப் பழங்கள் மற்றும் காய்கறிகளும் பசுமை நடவடிக்கையின் TOPலிருந்து TOTAL” என்ற திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட உள்ளன.
  • இந்த நடவடிக்கையானது பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பயிரிடும் விவசாயிகளுக்கு உதவுவதை நோக்கமாகக்  கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டமானது தக்காளி, வெங்காயம்  மற்றும் உருளைக் கிழங்கிலிருந்து (TOP - Tomato, Onion and Potato) அடுத்த 6 மாதக் காலத்திற்கு அனைத்துப் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கும் விரிவுபடுத்தப் பட்டுள்ளது.
  • மத்திய உணவுப் பதப்படுத்துதல் தொழிற்துறை அமைச்சகமானது இந்தத் திட்டத்தின் கீழ் போக்குவரத்துச் செலவினத்திற்கான 50% தொகையை மானியமாக அளிக்க உள்ளது.
  • பசுமை நடவடிக்கையானது வெண்மைப் புரட்சி என்பதின் வரிசையில் 2018-19 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
  • இது மின்னணு முறையிலான தேசிய வேளாண் சந்தைத் தளத்தின் மூலம் விவசாயிகளை நுகர்வோருடன் இணைப்பதன் மூலம் TOP வகை காய்கறிகளைச் சந்தைப்படுத்துவதின் மீது கவனம் செலுத்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்