“பூமியைச் சரி செய்தல்” (Earthshot Prize) என்ற விருது
October 16 , 2020 1751 days 785 0
பிரிட்டனின் இளவரசரான, கேம்பிரிட்ஜின் பிரபுவான வில்லியம் 50 மில்லியன் பவுண்டு மதிப்புடைய “பூமியைச் சரி செய்தல்” என்ற ஒரு பரிசை அறிமுகப் படுத்தியுள்ளார்.
இது உலகை மிகவும் அச்சுறுத்தி வரும் சில சுற்றுச்சூழல் சவால்களுக்கு வேண்டிய புத்தாக்கத் தீர்வுகளுக்குத் தேவையான நிதியினை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
“பூமியைச் சரி செய்தல்” என்ற விருதானது நமது கோளிற்கு மிகவும் இலக்காக உள்ள 5 “எர்த் ஷாட்களை” மையமாகக் கொண்டுள்ளது.
இயற்கையைப் பாதுகாத்தல் & மீட்டெடுத்தல், நமது காற்றைத் தூய்மையாக்குதல், நமது கடலை மீட்டெடுத்தல், கழிவுகளற்ற உலகைக் கட்டமைத்தல், நமது காலநிலையை நிர்ணயித்தல் ஆகியவை இந்த வாரத்தில் வெளியிடப் பட்ட 5 எர்த் ஷாட்டுகளாகும்.
இந்த விருதானது “பூமியைச் சரி செய்வதை” அடைவதற்காக வேண்டி குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை ஏற்படுத்திய எந்தவொரு சிறப்புமிகு தீர்வுகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் வழங்கப்பட இருக்கின்றது.