“2040 ஆம் ஆண்டிற்குள் நெகிழி மாசுபாட்டை ஒழித்தல்” என்ற அறிக்கை
November 18 , 2023 545 days 401 0
பொருளாதார ஒத்தழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பானது, “2040 ஆம் ஆண்டிற்குள் நெகிழி மாசுபாட்டை ஒழித்தல் : ஒரு கொள்கைசார் சூழ்நிலை பகுப்பாய்வு” என்ற இடைக்கால அறிக்கையை வெளியிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில், 21 மில்லியன் டன் (MT) நெகிழிக் குப்பைகள் உலக சுற்றுச்சூழலில் வெளியிடப்பட்டுள்ளது.
நெகிழிப் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்தால், 2040 ஆம் ஆண்டிற்குள் சுற்றுச்சூழலில் அளவில் பெரிய (மேக்ரோபிளாஸ்டிக்) நெகிழி குப்பையின் அளவு 50 சதவீதம் அதிகரிக்கும்.
அதாவது, சுமார் 30 மெட்ரிக் டன் நெகிழி சுற்றுச்சூழலில் வெளியிடப்படும். அதில் 9 மெட்ரிக் டன் நீர்வாழ் சூழலில் வெளியிடப்படும்.
2040 ஆம் ஆண்டில், இவற்றை நீக்கும் நடவடிக்கைகளுக்காக உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5 சதவீதம் செலவாகும்.
2020 மற்றும் 2040 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் கழிவு சேகரிப்பு, வகைப்படுத்துதல் மற்றும் சுத்திகரிப்புக்கான முதலீட்டுத் தேவைகள் 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும்.