TNPSC Thervupettagam

“35-க்கு 35” மின்மயமாக்கல் இலக்கு

June 13 , 2026 2 days 53 0
  • 2035 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய இறுதி ஆற்றல் தேவையில் மின்சாரத்தின் பங்கை 35% ஆக உயர்த்துவதற்கான “35க்கு 35” (“35 by 35”) இலக்கை COP31 இணைத் தலைமையான ஆஸ்திரேலியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் முன்மொழிந்துள்ளன.
  • ஜெர்மனியின் பான் நகரில் நடைபெற்ற பான் பருவநிலைக் கூட்டத்தில் இந்த முன் மொழிவு அறிவிக்கப்பட்டது.
  • தற்போதைய உலகளாவிய இறுதி ஆற்றல் நுகர்வான சுமார் 20-23% என்ற அளவிலிருந்து மின்சாரத்தின் பங்கை உயர்த்துவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • கட்டிடங்கள், போக்குவரத்து மற்றும் தொழில்துறை போன்ற துறைகளில் மின் மயமாக்கலை அதிகரிப்பதில் இந்த இலக்கு கவனம் செலுத்துகிறது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலைச் செயல்முறையின் கீழ் பிணைக்கப்படாத முன்னெடுப்பான COP31 செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக இது உள்ளது.
  • உலக வெப்பமயமாதலை 1.5°C ஆகக் கட்டுப்படுத்தும் பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்கிற்கு இந்த முன்மொழிவு ஆதரவளிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்