2020 ஆம் ஆண்டில் பிரான்சு மற்றும் ஜெர்மனி ஆகியவற்றால் தொடங்கப்பட்ட இந்த முன்னெடுப்பின் முதல் சந்திப்பானது 2021 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது.
உலக சுகாதார அமைப்பானது மற்ற மூன்று சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து “One Health” குழு என்ற ஓர் உலகளாவியத் திட்டத்தை உருவாக்குவதில் உதவுவதற்கான நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது.
விலங்குவழித் தொற்று நோய்கள் பரவுவதைத் தடுப்பதில் இந்தக் குழு உறுதுணையாகச் செயல்படும்.
விலங்குவழித் தொற்றுநோய் (அ) பெருந்தொற்று என்பது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கோ (அ) மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கோ பரவக்கூடிய ஒரு தொற்றுநோயாகும்.