TNPSC Thervupettagam

1 கோடி இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் மேம்பாடு

August 17 , 2026 16 hrs 0 min 32 0
  • ஓராண்டிற்குள் 1 கோடி (10 மில்லியன்) இந்திய இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) திறன்களில் பயிற்சி அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று அறிவித்தார்.
  • இந்த முன்னெடுப்பானது இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன்களை வழங்கி, வளர்ந்து வரும் தொழில்நுட்ப வாய்ப்புகளுக்கு அவர்களைத் தயார் படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • புது தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின உரையின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
  • இது சப்த தாரா கட்டமைப்பின் கீழ் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளில் பரந்த கவனத்தை செலுத்துவதன் ஒரு பகுதியாகும்.
  • பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவின் விரைவான விரிவாக்கத்தை அரசாங்கம் எடுத்துரைத்தது.
  • இந்த முன்னெடுப்பானது இந்தியாவின் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புச் சூழலை வலுப்படுத்துவதையும், உலகளாவிய செயற்கை நுண்ணறிவுப் பொருளாதாரத்தில் இளைஞர்கள் பங்கேற்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்