மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமானது (CFTRI - Central Food Technological Research Institute) 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட சாப்பிடுவதற்குத் தகுந்த உணவுகளைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றது.
இந்த உணவு பானிப் புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் வழங்கப்பட விருக்கின்றது.
CFTRI என்பது அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி ஆணையத்தின் கீழ் இயங்கும் ஆய்வகங்களில் ஒன்றாகும்.
இது 1950 ஆம் ஆண்டு அக்டோபர் 21 அன்று கர்நாடகாவின் மைசூரில் திறக்கப்பட்டது.