TNPSC Thervupettagam

10 பில்லியன் ஆண்டுகள் பழமையான ரேடியோ சமிக்ஞை

May 28 , 2026 2 days 57 0
  • பூமியை வந்தடைவதற்கு முன்பு கிட்டத்தட்ட 10 பில்லியன் ஆண்டுகள் பயணித்த 'FRB 20240304B' என்ற அதிவேக ரேடியோ அலை வெடிப்பை அறிவியலாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
  • இந்த சமிக்ஞை 2024 ஆம் ஆண்டு மார்ச் 4 அன்று தென்னாப்பிரிக்காவில் உள்ள MeerKAT தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்டது, மேலும் அதன் தாயக விண்மீன் மண்டலம் ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கியைப் பயன்படுத்தி அடையாளம் காணப் பட்டது.
  • அதிவேக ரேடியோ அலை வெடிப்புகள் (FRBs) என்பவை தொலைதூர விண்வெளிப் பொருட்களிலிருந்து வெளிவரும் குறுகிய மற்றும் தீவிரமான ரேடியோ அலைத் துடிப்புகளாகும் என்பதோடு மேலும் காந்த விண்மீன்கள் இதற்கான ஒரு சாத்தியமான ஆதாரமாகக் கருதப்படுகின்றன.
  • இந்த வெடிப்பு பெருவெடிப்புக்கு சுமார் 2-3 பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட உச்ச விண்மீன் உருவாக்கக் காலமான பிரபஞ்ச நண்பகல் எனும் காலத்தில் உருவானதுடன், இது உள்ளூர்மயமாக்கப்பட்ட FRB-களின் செவ்வொளிப் பெயர்ச்சி வீச்சை இரட்டிப்பாக்கியுள்ளது.
  • லோஃபார் (LOFAR - குறை அதிர்வெண் அணிவரிசை) என்ற ஐரோப்பிய ரேடியோ அலை தொலைநோக்கி வலையமைப்பு, சுமார் 10 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள 'SpARCS1049' விண்மீன் பேரடைக் கொத்தைச் சுற்றியுள்ள ஒரு ரேடியோ அலை சிறுவளையத்தையும் கண்டறிந்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்