10 முன்னணி வேளாண் பொருள் ஏற்றுமதி நாடுகள் பட்டியலில் இந்தியா
July 29 , 2021 1477 days 566 0
உலக வர்த்தக அமைப்பின் அறிக்கையானது கடந்த 25 ஆண்டுகளில் உலக வேளாண் வர்த்தகத்தில் நிலவி வரும் போக்கின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டிற்கான 10 முன்னணி வேளாண் பொருள் ஏற்றுமதி நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.
இந்தியா மற்றும் மெக்சிகோ ஆகியவை முறையே 3.1% மற்றும் 3.4% என்ற அளவில் உலக வேளாண் ஏற்றுமதியின் பங்கோடு உலகின் மிகப்பெரிய ஏற்றுமதி நாடுகளாக திகழ்ந்த நியூசிலாந்து (9வது) மற்றும் மலேசியா (7வது) ஆகியவற்றைப் பின்னுக்குத் தள்ளியுள்ளன.
2019 ஆம் ஆண்டில் இந்திய நாடானது மூன்றாவது மிகப்பெரியப் பருத்தி ஏற்றுமதி நாடாகவும் (7.6%), 4வது மிகப்பெரிய இறக்குமதி நாடாகவும் (10%) திகழ்ந்தது.
எனினும் உலக வேளாண் ஏற்றுமதியில் மதிப்பு கூட்டப்பட்ட பங்களிப்பு (value-added contributor) நாடாக இந்தியா பின் தங்கியுள்ளது.
1995 ஆம் ஆண்டில் இந்தப் பட்டியலில் முன்னணியில் இருந்த அமெரிக்காவினை (22.2%) 2019 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியம் (16.1%) முந்தியுள்ளது.
1995 ஆம் ஆண்டில் 6வது இடத்திலிருந்த சீனா (4%) 2019 ஆம் ஆண்டில் 4வது இடத்திற்கு (5.4%) முன்னேறியுள்ளது.
10 முன்னணி ஏற்றுமதி நாடுகளும் 1995 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கிடையே 96 சதவீதத்திற்கும் மேலான ஏற்றுமதிகளை மேற்கொண்டுள்ளன.