இந்தியாவில் மொத்தம் 6 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களானது தங்களின் தகுதி வாய்ந்த பதின்ம வயதினர் அனைவருக்கும் முதல் தவணை கோவிட்-19 தடுப்பூசியை வழங்கியுள்ளது.
அந்த 6 மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களாவன: இமாச்சலப் பிரதேசம், கோவா, லடாக், சிக்கிம், லட்சத்தீவு, டாமன் & டையூ மற்றும் தாதர் & நாகர் ஹவேலி ஆகியனவாகும்.
கோவா தனது அனைத்துக் குடிமக்களுக்கும் முதல் தவணை கோவிட் தடுப்பூசியினை வழங்கிய இரண்டாவது இந்திய மாநிலமாக மாறியுள்ளது.
இந்த மைல்கல்லை அடைந்த முதல் மாநிலம் இமாச்சலப் பிரதேசமாகும்.
நீலகிரியானது தனது குடிமக்கள் அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசியினை வழங்கிய தமிழ்நாட்டின் முதல் மாவட்டமாக மாறியுள்ளது.