100 சதவிகித நேரடிப் பணமற்ற முறையில் சுங்கக் கட்டண வசூல்
February 22 , 2021 1626 days 617 0
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கக் கட்டண வசூலிப்பகங்களில் 100% நேரடிப் பணமற்ற முறையிலான சுங்கக் கட்டண வசூலை வெற்றிகரமாக எட்டியுள்ளது.
தேசிய நெஞ்சாலைகளில் உள்ள கட்டண வசூலிப்பகங்களிடையே இருக்கும் அனைத்து சாலைகளும் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் “ஃபாஸ்டேக்” சாலைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தற்பொழுது வரை நாட்டின் மொத்த “ஃபாஸ்டேக்” அணுகலானது 87 சதவீதத்தை எட்டியுள்ளது.