TNPSC Thervupettagam

100 GW சூரிய PV தொகுதி

August 20 , 2025 17 hrs 0 min 23 0
  • அங்கீகரிக்கப்பட்ட மாதிரிகள் மற்றும் உற்பத்தியாளர்களின் (ALMM) பட்டியலின் கீழ் இந்தியா 100 GW அளவிலான சூரிய ஒளி மின்னழுத்தத் (PV) தொகுதி சார்ந்த மின் உற்பத்தித் திறனை எட்டியது.
  • இது 2014 ஆம் ஆண்டில் வெறும் 2.3 GW ஆக இருந்த அளவிலிருந்து ஏற்பட்டுள்ள உயர்வைக் குறிக்கிறதோடு இது உள்நாட்டுச் சூரிய சக்தி உற்பத்தியில் விரைவான வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.
  • ALMM பட்டியல் ஆனது 2019 ஆம் ஆண்டில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தினால் (MNRE) வெளியிடப் பட்டதோடு 2021 ஆம் ஆண்டில் வெளியிடப் பட்ட இதன் முதல் பட்டியல் 8.2 GW திறனைக் குறிப்பிட்டது.
  • இந்த முன்னேற்றம் உயர் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி தொகுதிகளுக்கான உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டம் (PLI) மற்றும் ஆத்மநிர்பார் பாரத் இலக்குகள் போன்ற திட்டங்களால் முன்னேற்றப்படுகிறது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியா தனது 500 GW அளவிலான புதைபடிவம் சாரா எரி பொருள் சார்ந்த உற்பத்தி திறன் இலக்கை அடையும் பாதையில் உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்