2047 ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அளவில் நீரேற்ற சேமிப்பிடத்தை அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
மேல்நோக்கி நீரேற்ற செய்யப்பட்ட சேமிப்பிடமானது மேல்நோக்கி தண்ணீரை ஏற்றவும், அதிக்கப்பட்ச மின் தேவையின் போது மின்சாரம் தயாரிக்கவும் கூடுதல் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது.
இது மின்சார விநியோகத்தை நிர்வகிக்கவும், சூரிய மின்னாற்றல் மற்றும் காற்று ஆற்றல் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதரிக்கவும் உதவும்.
மத்திய மின்சார ஆணையம் (CEA) இந்தத் திட்டங்களுக்காக 120 சாத்தியமான இடங்களைக் கண்டறிந்துள்ளது.
ஏற்கனவே சுமார் 22 ஜிகாவாட் அளவிலான திட்டங்கள் கட்டுமானப் பணியில் உள்ளன, மேலும் 50 முதல் 60 ஜிகாவாட் வரையிலான திட்டங்கள் படிப்படியாகச் செயல் படுத்துவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.