மத்திய சுகாதார அமைச்சகம் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்துடன் இணைந்து நாடு முழுவதும் 100 மாவட்டங்களில் 100 உணவுத் தெருக்களை உருவாக்கச் செய்யுமாறு மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான உணவு நடைமுறைகளை உறுதி செய்வதற்காக இது போன்று பல தெருக்களை உருவாக்கச் செய்வதற்கு இது ஒரு முன் மாதிரியாக இருக்கும்.
இந்தத் திட்டத்தின் நோக்கம் உணவு வணிகங்கள் மற்றும் சமூக உறுப்பினர்களிடையே பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை ஊக்குவிப்பதாகும்.
தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் இதற்கு 60:40 அல்லது 90:10 என்ற விகிதத்தில் நிதி உதவி வழங்கப் படும்.