ஸ்வீடனிலுள்ள பசுமை எஃகு உற்பத்தி நிறுவனமான ‘HYBRIT’, நிலக்கரியைப் பயன்படுத்தாமல் தயாரிக்கப்பட்ட எஃகினை உலகிலேயே முதல்முறையாக தனது வாடிக்கையாளருக்கு விநியோகம் செய்துள்ளது.
இந்த எஃகானது ஹைட்ரஜன் ஊடு வழி இரும்புத் தயாரிப்புத் தொழில்நுட்பத்தை (Hydrogen Breakthrough Ironmaking Technology) கொண்டு உருவாக்கப்பட்டது.
இந்நிறுவனம் தனது தயாரிப்புப் பொருளின் சோதனை ஓட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் புதைபடிமமற்ற எஃகினை வால்வோ குழுமத்திற்கு விநியோகிக்கத் தொடங்கி உள்ளது.