1000 ஆண்டுகள் பழமையான சோழ கங்கம் ஏரி
July 27 , 2025
16 days
99
- தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சுமார் 12 கோடி ரூபாய் செலவில் ‘சோழ கங்கம்’ ஏரி மேம்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
- மேலும் அந்த இடத்தில் சுமார் 7.25 கோடி ரூபாய் செலவில் சுற்றுலா நடவடிக்கைகள் மேம்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
- இந்த ஆண்டு ஜூலை 23 ஆம் தேதியன்று வரும் ஆடி திருவாதிரை அன்று புகழ்பெற்ற தமிழ் மன்னர் முதலாம் இராஜேந்திர சோழனின் பிறந்த நாளில் இது அறிவிக்கப் பட்டது.
- சோழ கங்கம் ஆனது ‘பொன்னேரி’ என்றும் அழைக்கப்பட்டது.
- இது மன்னர் முதலாம் இராஜேந்திர சோழனால் வெட்டப்பட்டது.
- திருவாலங்காடு செப்புத் தகடுகளின்படி, அவரது வடக்கு நோக்கியப் படையெடுப்பைக் கொண்டாடுவதற்காக இது வெட்டப்பட்டது.
- முதல்வர் வெளியிட்ட அறிவிப்பின்படி, 700 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இக்குளத்தின் கரைகள் பலப்படுத்தப்படும்.
- ஆடி திருவாதிரையில் புகழ்பெற்ற தமிழ் மன்னர் முதலாம் இராஜேந்திர சோழனின் பிறந்த நாளைத் தமிழக அரசு 2021 ஆம் ஆண்டு முதல் கொண்டாடி வருகிறது.

Post Views:
99