TNPSC Thervupettagam

10,000 கி.மீ. தொலைவிற்கான ஒளியிழை வடங்கள்

April 29 , 2023 831 days 350 0
  • இந்தியத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமானது, 2025 ஆம் நிதியாண்டிற்குள் இந்தியா முழுவதும் 10,000 கி.மீ. தொலைவிற்கு ஒளியிழை வடங்களை நிறுவ உள்ளது.
  • இந்த நடவடிக்கையானது, தொலைதூர இடங்களுக்கு இணையச் சேவை இணைப்பை வழங்கச் செய்வதையும், 5G மற்றும் 6G போன்ற புதுயுகத் தொலைத்தொடர்பு தொழில் நுட்பங்களின் செயலாக்கத்தினைத் துரிதப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • தேசிய நெடுஞ்சாலைகள் தளவாடங்கள் மேலாண்மை லிமிடெட் (NHLML) என்ற நிறுவனமானது, எண்ணிமச் சேவை சார்ந்த நெடுஞ்சாலைகளின் வலையமைப்பைச் செயல்படுத்த உள்ளது.
  • டெல்லி-மும்பை விரைவு வழித் தடச் சாலையில் சுமார் 1,367 கிமீ தூரத்தினையும், ஹைதராபாத்-பெங்களூரு வழித்தடத்தில் 512 கி.மீ. தூரத்தினையும் சோதனைமுறை அமலாக்கத்திற்கான சில பாதைகளாக இந்தியத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அடையாளம் கண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்