1000க்கும் மேற்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை
September 29 , 2025 43 days 85 0
சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (SMCH) 1,006 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
உயிருடன் உள்ள உறுப்புக் கொடையாளரின் மூலமாக, 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் SMCH மருத்துவமனையில் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப் பட்டது.
மொத்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில், 837 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் ஆனது உயிருடன் உள்ள பொருத்தமான உறுப்பு கொடையாளர்களிடம் இருந்தும், 169 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் ஆனது இறந்த உறுப்புக் கொடையாளர்களிடமிருந்தும் செய்யப்பட்டன.