சிறிய செயற்கைக்கோள் ஏவு வாகன (SSLV) தொழில்நுட்பத்தை மாற்றுவதற்காக இஸ்ரோ நிறுவனமானது இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) உடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்த ஒப்பந்தம் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதியன்று பெங்களூருவில் இஸ்ரோ, நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) மற்றும் INSPACE ஆகியவற்றால் கையெழுத்தானது.
இது INSPACE மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட 100வது தொழில்நுட்பப் பரிமாற்ற ஒப்பந்தமாகும் என்பதோடு இது இந்தியாவின் விண்வெளித் துறையில் தொழில்துறை பங்களிப்பில் ஒரு முக்கியப் படிநிலையாகும்.