குடியரசுத் தலைவர் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி பொருளாதார ரீதியில் பின்தங்கிய சமூகத்தினருக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கின்ற 124வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு (தற்சமயம் 103வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம்) தனது ஒப்புதலினை அளித்திருக்கின்றார்.
மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் மக்களவையில் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் தேதியன்று இட ஒதுக்கீட்டு மசோதாவை அறிமுகம் செய்தார். இம்மசோதா 323 ஆதரவு வாக்குகளும் வெறும் 3 எதிர்ப்பு வாக்குகளும் பெற்று நிறைவேற்றப்பட்டது.
மாநிலங்களவையும் இம்மசோதாவை 2019 ஆம் ஆண்டு ஜனவரி 09 ஆம் தேதியன்று 165 ஆதரவு வாக்குகளோடும் 07 எதிர்ப்பு வாக்குகளோடும் நிறைவேற்றியது.