பேரரசர் முதலாம் இராஜராஜ சோழனின் (கி.பி 947-கி.பி 1014) 1,040வது சதய விழா அல்லது பிறந்த நாளைக் குறிக்கும் இரண்டு நாட்கள் அளவிலான விழாவானது தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் கோவிலில் நடைபெற்றது.
'ஐப்பசி' மாதத்தின் சதய நட்சத்திரத்தில் வருகின்ற முதலாம் இராஜ ராஜனின் பிறந்த நாள் ஆனது சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
கி.பி 985 முதல் 1014 வரை அப்பகுதியை ஆட்சி செய்த அவர், அவரது இராணுவப் பலத்திற்காக புகழ் பெற்றவர் ஆவார்.
அவர் வடக்கு இலங்கையின் குறிப்பிட்ட பகுதி, சேர நாடு மற்றும் பாண்டிய நாட்டை ஆட்சி செய்தார்.
மேலும், அவர் லட்சத்தீவுகள், திலதுன்மதுலு பவளப்பாறைத் திட்டு மற்றும் இந்தியப் பெருங்கடலில் உள்ள மாலத்தீவின் வடக்குத் தீவுகளில் ஒரு பகுதியை வாங்கினார்.
முதலாம் இராஜராஜ சோழன், கி.பி 1010 ஆம் ஆண்டில், தஞ்சாவூரில் பிரமாண்டமான பிரகதீஸ்வரர் கோவிலை (இராஜராஜேஸ்வரம் கோவில்) கட்டமைத்தார்.