10வது P-8I ரக போர் விமானம் – போயிங்
July 17 , 2021
1422 days
520
- இந்தியக் கடற்படையானது போயிங் நிறுவனத்திடமிருந்து 10வது P-8I ரக நீர்மூழ்கி எதிர்ப்பு போர் விமானத்தைப் பெற்றுள்ளது.
- போயிங் என்பது அமெரிக்காவிலுள்ள ஒரு விமானத் தயாரிப்பு நிறுவனமாகும்.
- இந்தியக் கடற்படையில் பல ஆண்டுகளாக உள்ள டியூபோலெவ் Tu-142 ரக விமானங்களுக்குப் பதிலாக P-8I ரக விமானங்கள் வழங்கப்பட்டுள்ளன.
- 8 P-8I ரக போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தமானது 2009 ஆம் ஆண்டில் பாதுகாப்பு அமைச்சகத்தினால் மேற்கொள்ளப்பட்டது.
- 2016 ஆம் ஆண்டில் மேலும் 4 P-8I ரக விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.
Post Views:
520