11வது வருடாந்திர நிமோனியா (கபவாதம்) மற்றும் வயிற்றுப் போக்கு செயல்பாட்டு அறிக்கை
November 17 , 2020 1723 days 560 0
இதனை சர்வதேச நோய்த் தடுப்பு மருந்துகள் அணுகல் மையம் வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, இந்தியாவானது உலகளாவிய இலக்கான 5 தடுப்பு மருந்துகளில் 3ல் 90% உள்ளடக்கத்தை (பயன்பாட்டை) எட்டியுள்ளது.
டிபிடி தடுப்பு மருந்து, தட்டம்மை நோய்த் தடுப்பு மருந்து, பிசிவி தடுப்பு மருந்து, ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து மற்றும் ஹீமோபிளியஸ் இன்புளூயன்சா வகை பி தடுப்பு மருந்து ஆகியவை இந்தத் தடுப்பு மருந்துகளாகும்.
உலகில் நிமோனியாவினால் நிகழும் இறப்புகளில் 20% இறப்புகள் இந்தியாவில் ஏற்படுகின்றன.
உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் நாட்டில் அதிக அளவிலான நிமோனியா பாதிப்புகளைக் கொண்டுள்ளவைகளாகக் கணிக்கப் பட்டு உள்ளன.