இந்தியக் கடற்படையானது போயிங் நிறுவனத்திடமிருந்து தனக்கான 11வது P-8i ரக விமானத்தைப் பெற்றது.
இந்த நீர்மூழ்கி எதிர்ப்புப் போர் விமானமானது, 4கூடுதல் போயிங் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா மேற்கொண்ட ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படும் 3வது விமானமாகும்.
2009 ஆம் ஆண்டில் 8 போயிங் P-8i ரக விமானங்களை வாங்குவதற்காக மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்த விமானமானது ஏற்கனவே இந்தியக் கடற்படைக்கு வழங்கப் பட்டு விட்டது.
மேலும் நான்கு விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தமானது 2016 ஆம் ஆண்டில் கையெழுத்தானது.