11வது பிராந்தியத் தர மாநாடு (RQC - Regional Quality Conclave)
December 22 , 2019 1958 days 600 0
இது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 20 அன்று உத்தரகாண்ட் மாநிலத்தின் உதம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள ருத்ராபூரில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இது பிஎச்டி வர்த்தக மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்புடன் (PHD Chamber of Commerce and Industry - PHDCCI) இணைந்து இந்திய தர மன்றத்தினால் (Quality Council of India - QCI) ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த மாநாட்டின் மூலம் இந்தியத் தர மன்றமானது நாட்டின் மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள தொழில்துறைகளை அணுகலாம் என்று எண்ணுகின்றது.
இந்த மாநாட்டின் கருப்பொருள், ‘ருத்ராபூர் RQC’: ‘தரம், புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப இடையீடுகளுடன் மேம்படுத்தப்பட்ட உற்பத்தி’ என்பதாகும்.