11வது வேளாண் கணக்கெடுப்பு (2021-22) ஆனது சமீபத்தில் தொடங்கப்பட்டது.
இந்தக் கணக்கெடுப்பின் முக்கிய நோக்கமானது, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது மற்றும் சிறு விவசாயிகளை ஒழுங்கமைப்பதன் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பது என்பதாகும்.
இந்த ஆண்டு, முதல் முறையாக திறன்பேசிகள் மற்றும் வரைபட்டிகை ஆகியவற்றின் மூலம் தரவுகள் சேகரிக்கப்படும்.
வேளாண் கணக்கெடுப்பானது, 5 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்படுகிறது.
வேளாண் கணக்கெடுப்புத் திட்டம் ஆனது 1970-71 ஆம் ஆண்டு முதல் வேளாண் அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக 1970-71 ஆம் ஆண்டானது குறிப்பு ஆண்டாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதற்கு முன்பாக வேளாண் கணக்கெடுப்பு 2015-16 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.