யுனெஸ்கோ 12 புதிய உலகளாவிய புவிசார் பூங்காக்களை அறிவித்துள்ளது.
உலகளாவிய புவிசார் பூங்காக்களின் மொத்த எண்ணிக்கை 51 நாடுகளில் உள்ள 241 இடங்களாக அதிகரித்துள்ளது.
புதிய இடங்கள் சீனா, பிரான்ஸ், கிரீஸ், அயர்லாந்து, ஜப்பான், மலேசியா, போர்ச்சுகல், ரஷ்யா, துனிசியா மற்றும் உருகுவே ஆகிய நாடுகளில் அமைந்துள்ளன.
இந்தப் பட்டியலின் கீழ் துனிசியா தனது முதல் உலகளாவிய புவிசார் பூங்காவைப் பெற்றுள்ளது.
யுனெஸ்கோ உலகப் புவியியல் பூங்காக்களானது 2015-ஆம் ஆண்டில் ஒரு அதிகாரப் பூர்வ முத்திரையாக நிறுவப்பட்டு, உள்ளூர் சமூகங்கள் மற்றும் பங்குதாரர்களின் தீவிர ஈடுபாட்டுடன் அடிமட்டத்திலிருந்து தொடங்கும் அணுகுமுறையைப் பின்பற்றுகின்றன.
இந்த அந்தஸ்து நான்கு ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது, மேலும் இதனைத் தொடர மறுமதிப்பீடு தேவைப்படுகிறது.