12 பொதுத்துறை நிறுவனங்கள் (PSU) – தனியார்மயமாக்கம்
March 15 , 2021 1611 days 694 0
நிதி ஆயோக்கானது தனியார்மயமாக்கம் செய்யப்பட வேண்டிய PSU நிறுவனங்கள்குறித்த தனது முதலாவது பட்டியலைச் சமர்ப்பித்துள்ளது.
இந்தப் பட்டியலானது முதலீடு மற்றும் பொதுச் சொத்துகள் மேலாண்மைத் துறை (DIPAM - Department of Investment and Public Asset Management) மற்றும் முதலீட்டு விலக்கல் குறித்த செயலாளர்களின் முக்கியக் குழு (Core Group of Secretaries on Divestment) ஆகியவற்றால் ஆய்வு செய்யப்பட உள்ளது.
முதலீட்டு விலக்கல் குறித்த செயலாளர்களின் முக்கியக் குழுவானது அமைச்சரவைச் செயலாளரினால் தலைமை தாங்கப்படும்.