123 ஆண்டுகளில் பதிவான ஆறாவது வறட்சியான அக்டோபர் மாதம்
November 4 , 2023 662 days 473 0
2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கேரளாவில் 1% அதிக மழை பெய்துள்ளது.
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் கடந்த 123 ஆண்டுகளில் ஆறாவது வறட்சியான அக்டோபர் மாதத்தினை எதிர் கொண்டன.
இப்பகுதிகளில் அக்டோபர் மாதத்தில் 74.9 மி.மீ. மழை மட்டுமே பெய்த நிலையில், இது இயல்பை விட 60 சதவீதம் குறைவாகும்.
இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தமிழகத்தில் சுமார் 9.9 செ.மீ மழை மட்டுமே பெய்துள்ளது.
1901 ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வரையில், அக்டோபர் மாதத்தில் பதிவான ஒன்பதாவது மிகக் குறைவான மழைப்பொழிவு இதுவாகும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் தான் அக்டோபர் மாதத்தில் அதிகமாக 116% பருவ மழை பெய்துள்ளது.
அதன் இயல்பான மழைப்பொழிவு அளவான 17.1 செமீக்கு பதிலாக, சுமார் 42% மழைப் பற்றாக்குறையுடன் அம்மாதம் நிறைவடைந்தது.
தென்மேற்குப் பருவமழையானது கடந்த சில ஆண்டுகளைப் போலன்றி, இந்த ஆண்டில் 134 நாள் அளவிலான பருவத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட சரியான நேரத்தில் முடிவடைந்தது.
குறிப்பிடத்தக்க வகையில், தெற்கு தீபகற்பத்தின் வறட்சியான ஆறு அக்டோபர் மாதங்களில், 2023, 2016 மற்றும் 1988 ஆகிய ஆண்டுகளின் அக்டோபர் மாதங்கள் எல் நினோ ஆண்டுகள் ஆகும்.