இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் அவர்கள், “UPI123Pay” எனப்படும் சிறப்பம்ச கைபேசிகளுக்காக (feature phones) வேண்டி ஒரு ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகத்தினை வெளியிட்டார்.
UPI ‘123pay’ என்பது சிறப்பம்ச கைபேசிகளைப் பயன்படுத்தச் செய்வோருக்கான சேவைகளைத் தொடங்கிச் செயல்படுத்துவதற்கான 3 அடுக்கு செயல்முறை ஆகும்.
“வருடுதல் மற்றும் பணவழங்கீடு” (scan and pay) என்ற ஒரு தெரிவினைத் தவிர பிற அனைத்து வகைப் பரிமாற்றங்களையும் “UPI123pay” முறையின் உதவியோடு ஒரு சிறப்பம்ச கைபேசியினால் செய்ய இயலும்.
“UPI123pay” முறையைப் பயன்படுத்துவதற்கு அந்த சிறப்பம்ச கைபேசியுடன் வங்கிக் கணக்கு இணைக்கப் பட்டிருக்க வேண்டும்.
இதில் பரிமாற்றத்தினைத் தொடங்கிச் செயல்படுத்துவதற்கு இணையதள இணைப்பு என்பது அவசியமில்லை.