12வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பு மற்றும் 5வது ADMM Plus சந்திப்பு
October 22 , 2018 2496 days 777 0
சிங்கப்பூரில் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 19 மற்றும் 20 தேதிகளில் 12வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடும் (Asian Defence Ministers Meeting - ADMM) 5வது ADMM Plus மாநாடும் நடத்தப்பட்டன.
2006 ஆம் ஆண்டு ADMM ஏற்படுத்தப்பட்டதற்குப் பிறகிலிருந்து இந்த அமைப்பின் மாநாட்டிற்கு சிங்கப்பூர் தலைமை தாங்குவது இது இரண்டாவது முறையாகும். மேலும் 2010-ம் ஆண்டு ADMM Plus ஏற்படுத்தப்பட்டதற்குப் பிறகு முதல்முறையாக அதன் மாநாட்டிற்கு சிங்கப்பூர் தலைமை தாங்குகிறது.
பிராந்தியப் பாதுகாப்பு நடைமுறையில் ஆசியான் நாடுகளுக்கும் அதன் உறுப்பு நாடுகளுக்கும் யுக்திசார் பேச்சுவார்த்தை மற்றும் நடைமுறை ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக அமைச்சர்கள் மட்டத்திலான முக்கிய வடிவமாக ADMM மற்றும் ADMM Plus செயல்படுகின்றது.