TNPSC Thervupettagam

13வது BRICS உச்சி மாநாடு

September 14 , 2021 1413 days 585 0
  • 13வது BRICS உச்சி மாநாட்டிற்கு இந்தியப் பிரதமர் மோடி காணொலி மூலமாக தலைமை தாங்கினார்.
  • 2021 ஆம் ஆண்டில்  BRICS அமைப்பிற்கு இந்தியா தலைமைப் பொறுப்பினை வகிப்பது BRICS அமைப்பின் 15வது ஆண்டு நிறைவுடன் ஒருங்கிணைந்து வருகிறது.
  • 13வது BRICS உச்சி மாநாட்டின் கருத்துருவானது, “BRICS@15 : தொடர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் ஒருமித்தக் கருத்திற்கான BRICS அமைப்பின் ஒத்துழைப்பு” என்பதாகும்.
  • 5 நாடுகளின் தலைவர்கள் ஆப்கானிஸ்தான் உட்பட குறிப்பிடத்தக்க சில பிராந்திய மற்றும் உலகளாவியப் பிராச்சினைகள் குறித்து ஆலோசனை செய்வர்.
  • 2016 ஆம் ஆண்டு கோவா உச்சி மாநாட்டிற்குப் பிறகு BRICS மாநாட்டிற்குப் பிரதமர் மோடி தலைமை வகிப்பது இது 2வது முறையாகும்.
  • BRICS என்பது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 முக்கிய நாடுகளின் ஒரு குழுவாகும்.
  • BRICS அமைப்பில் 2010 ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்கா இணைவதற்கு முன்பு இது BRIC என்று 4 நாடுகள் கொண்ட ஒரு அமைப்பாகவே இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்