13 நதிகளுக்கான புணரமைப்புத் திட்டம்
March 19 , 2022
1243 days
532
- வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சகமானது நாட்டிலுள்ள 13 முக்கிய நதிகளைப் புணரமைப்பதற்கான ஒரு திட்டத்தினை அறிவித்துள்ளது.
- இத்திட்டத்தில் உள்ளடங்கும் 13 நதிகளாவன
- இமாலய நதிகள் : ஜீலம், செனாப், ராவி, பியாஸ், சட்லஜ், யமுனை மற்றும் பிரம்ம புத்திரா ஆகியனவாகும்.
- தக்காணம் (அ) பீடபூமி ஆறுகள் : நர்மதை, கோதாவரி, மகாநதி, கிருஷ்ணா மற்றும் காவேரி ஆகியனவாகும்.
- உள்நாட்டு நீர்வடிகால் வகை நதி : லூனி
- இந்த 13 நதிகள், இந்தியாவின் புவியியல் பரப்பில் கிட்டத்தட்ட 57.45% பரவியுள்ளன.

Post Views:
532