13 ஆம் நூற்றாண்டின் புனிதத் துறவி நரஹரி தீர்த்தரின் சிலை
January 9 , 2025 133 days 219 0
13 ஆம் நூற்றாண்டின் துறவியான நரஹரி தீர்த்தரின் சுமார் மூன்றடி உயரச் சிலையை ஆராய்ச்சியாளர் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர்.
அவர் சிகாகோலு நகரத்தினைச் சேர்ந்தவராக இருக்கலாம் (தற்போதைய ஸ்ரீகாகுளம்).
தீர்த்தரின் முன்னோர்கள் தற்போதைய ஒடிசா மாநிலமாக உள்ள முந்தைய கஜபதி பேரரசில் நிலப்பிரபுக்களாக இருந்தனர்.
கிழக்கு கங்கை வம்சத்தின் மன்னர்களுக்கு 30 ஆண்டுகளாக துறவிகள் உதவியாக இருந்ததாக இந்தக் கல்வெட்டுச் சான்றுகள் தெரிவிக்கின்றன.
அவர் ஏற்கனவே மத்வாச்சார்யா அவர்களால் நான்காவது வரிசையில் ஒரு குருவாக நியமிக்கப் பட்டார் என்பதை இது குறிக்கிறது.
சிம்மாசலம் மற்றும் ஸ்ரீகூர்மம் (ஸ்ரீகாகுளம்) ஆகிய கோயில்களில் கிடைக்கப் பெற்ற சில கல்வெட்டுகளில் இது குறித்த அவரதுப் பங்களிப்புகள் நன்கு ஆவணப்படுத்தப் பட்டுள்ளன.
இந்த துறவியின் பெயருடன் 'லோக சுரக்சானா அதி நிபுண:', 'யோ அவதி கலிங்கப் பூ சாம்பவான்' ஆகிய சில பெரும் மரியாதைக்குரிய முன்னொட்டுகள் பயன்படுத்தப் படுகின்றன.