2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதியன்று 12 மாநிலங்கள் மற்றும் லடாக் ஒன்றியப் பிரதேசம் ஆகியவற்றிற்கான புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 157 மற்றும் 158 ஆகிய சட்டப் பிரிவுகள், ஆளுநர் பதவிக்கான தகுதி வரம்புகளைக் குறிப்பிடுகின்றன.
ஆளுநர் இந்திய அரசியலமைப்பினுடைய கூட்டாட்சி அமைப்பின் ஓர் அங்கமாக திகழ்வதோடு மட்டுமல்லாது மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையே ஒரு இணைப்புப் பாலமாக இவர் செயல்படுகிறார்.
ஆளுநர் அவர்கள் ஒரு மாநில அரசின் அரசியலமைப்பு சார்ந்த தலைவராகவும் அதன் பிரதிநிதியாகவும் 'இரட்டைத் திறனில்' செயல்படுகிறார்.
அவர் மாநில அரசின் அமைச்சர்கள் குழுவின் ஆலோசனைக்குக் கட்டுப்பட்ட வகையில் அரசியலமைப்பு சார்ந்த தலைவர் ஆவார்.
மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் இடையேயான ஒரு முக்கிய இணைப்பாக அவர் செயல்படுகிறார்.