1,200 உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் ஜனவரி 26 அன்று குடியரசு தினத்திலிருந்து அஸாமி, காரோ, இந்தி, கன்னடம், காசி, மலையாளம், மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டு உள்ளன.
தீர்ப்புகள் அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் வகையில் உச்ச நீதிமன்றம் மின்னணு - உச்ச நீதிமன்ற அறிக்கைகள் (e-SCR) திட்டத்தைச் செயல்படுத்துகிறது.
அதன்கீழ் சுமார் 34,000 தீர்ப்புகளை வழக்கறிஞர்கள், சட்ட மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு இலவசமாக வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது டிஜிட்டல் மயமாக்கலை நோக்கிய உச்ச நீதிமன்றத்தின் முக்கியப் படியாகும்.