TNPSC Thervupettagam

13-வது பிரிக்ஸ் நகரமயமாக்கல் மன்றம்

June 19 , 2026 15 hrs 0 min 31 0
  • அனைவரையும் உள்ளடக்கிய, நிலையான, மீள்திறன் கொண்ட மற்றும் மக்கள் மைய நகர மேம்பாட்டிற்கான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், புதுடெல்லியில் நடைபெற்ற 13-வது பிரிக்ஸ் நகரமயமாக்கல் மன்றம் 'நகர்ப்புற அமைச்சர்களின் பிரகடனத்தை' ஏற்றுக்கொண்டதுடன் முடிவடைந்தது.
  • இந்தியாவின் பிரிக்ஸ் தலைமையின் கீழ் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் இந்த மன்றம் கூட்டப்பட்டது.
  • "மக்களுக்கான நகரங்கள்: அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் மீள்திறன் கொண்ட நகர்ப்புற எதிர்காலத்திற்கான பிரிக்ஸ் ஒத்துழைப்பு" என்பது இந்த மன்றத்தின் கருத்துருவாகும்.
  • நகர்ப்புறச் சேவைகளுக்குச் சமமான அணுகலை உறுதி செய்வதை, குறிப்பாக விளிம்புநிலை குழுக்களுக்கு வழங்குவதை இப்பிரகடனம் வலியுறுத்தியது
  • இதில் பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், ரஷ்யா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் பங்கேற்றன.
  • மலிவுவிலை வீட்டுவசதி, குடிசைப்பகுதி மேம்பாடு, பொதுப் போக்குவரத்து, பருவ நிலை தழுவல், நீர் பாதுகாப்பு, திடக்கழிவு மேலாண்மை, நகர்ப்புற மறுமலர்ச்சி, நகராட்சி சீர்திருத்தங்கள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நகர்ப்புற நிர்வாகம் ஆகியவை குறித்து விவாதங்கள் நடைபெற்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்