அரசியலமைப்பு (131-வது திருத்த) மசோதா, 2026 மக்களவையை விரிவுபடுத்தவும், முன்கூட்டியே மகளிர் இடஒதுக்கீட்டைச் செயல்படுத்தவும் முன்மொழிகிறது.
இது மக்களவையின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 543-லிருந்து 850-ஆக (மாநிலங்களில் இருந்து 815 + ஒன்றியப் பிரதேசங்களில் இருந்து 35) அதிகரிக்க முன்மொழிகிறது.
2026 மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முன்னதாக சமீபத்திய தரவுகளைப் பயன்படுத்தி தொகுதி மறுவரையறை செய்ய அனுமதிக்கும் வகையில், இது அரசியலமைப்பு ப்பிரிவுகள் 81, 82 மற்றும் 334A ஆகியவற்றை திருத்துகிறது.
தொகுதி மறுவரையறைக்குப் பிறகு பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு (1/3) இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த இது வழிவகை செய்கிறது.
ஒரு புதிய தொகுதி மறுவரையறை ஆணையம் தொகுதிகளை மறுவரையறை செய்யும்; அதன் உத்தரவுகள் சட்டப்பூர்வமானவை மற்றும் அவற்றை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையீடு செய்ய முடியாது.