TNPSC Thervupettagam

131வது அரசியலமைப்பு திருத்த மசோதா 2025

November 26 , 2025 16 hrs 0 min 67 0
  • 131வது அரசியலமைப்பு திருத்த மசோதா, 2025 ஆனது, சண்டிகரை அரசியலமைப்பின் 240வது சரத்தின் கீழ் கொண்டுவர முன்மொழிகிறது.
  • சரத்து 240 ஆனது, சொந்தச் சட்டமன்றங்கள் இல்லாத ஒன்றியப் பிரதேசங்களுக்கு (UT) விதிமுறைகளை வெளியிட இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அனுமதியளிக்கிறது.
  • இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், லட்சத்தீவு மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் போன்ற ஒன்றியப் பிரதேசங்களைப் போலவே சண்டிகருக்கும் நேரடியாக விதிகளை உருவாக்க இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அனுமதி வழங்கப்படும்.
  • சண்டிகர் தற்போது பஞ்சாப் மற்றும் ஹரியானாவிற்கான பகிரப்பட்ட தலைநகராக உள்ளது.
  • இந்தத் திட்டம் விதிகளை வகுப்பதை நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது என்றும் சண்டிகரின் தற்போதைய நிர்வாக அமைப்பை மாற்றாது என்றும் மத்திய அரசு கூறியது.
  • இந்த மசோதா இன்னும் முன்மொழிவு நிலையில் உள்ளது மற்றும் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்