13வது ஆசிய–ஐரோப்பா சந்திப்பின் உச்சி மாநாடானது சமீபத்தில் நடத்தப் பட்டது.
இதில் இந்தியத் தரப்பானது துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடுவால் பிரதிநிதித்துவப் படுத்தப் பட்டது.
இந்த அமைப்பிற்குத் தற்போதைய தலைமை என்ற வகையில் கம்போடியா இதனை நடத்தியது.
2021 ஆம் ஆண்டில் இந்த அமைப்பின் ஒரு புதிய உறுப்பினர் துருக்கி ஆகும்
இந்த உச்சி மாநாட்டிற்கு “பகிரப்பட்ட வகையிலான வளர்ச்சிக்குப் பன்முகத் தன்மை வாதத்தை வலுப்படுத்துதல்” (Strengthening Multilateralism for Shared Growth) எனத் தலைப்பிடப் பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பானது 51 உறுப்பினர் நாடுகளின் பங்கேற்புடன் காணொலி வாயிலாக நடத்தப் பட்டது.
உறுப்பினர் நாடுகள் தவிர, ASEAN மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அமைப்பு நாடுகளும் இதில் பங்கேற்றன.