13வது BRICS உச்சி மாநாட்டிற்கு இந்தியப் பிரதமர் மோடி காணொலி மூலமாக தலைமை தாங்கினார்.
2021 ஆம் ஆண்டில் BRICS அமைப்பிற்கு இந்தியா தலைமைப் பொறுப்பினை வகிப்பது BRICS அமைப்பின் 15வது ஆண்டு நிறைவுடன் ஒருங்கிணைந்து வருகிறது.
13வது BRICS உச்சி மாநாட்டின் கருத்துருவானது, “BRICS@15 : தொடர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் ஒருமித்தக் கருத்திற்கான BRICS அமைப்பின் ஒத்துழைப்பு” என்பதாகும்.
5 நாடுகளின் தலைவர்கள் ஆப்கானிஸ்தான் உட்பட குறிப்பிடத்தக்க சில பிராந்திய மற்றும் உலகளாவியப் பிராச்சினைகள் குறித்து ஆலோசனை செய்வர்.
2016 ஆம் ஆண்டு கோவா உச்சி மாநாட்டிற்குப் பிறகு BRICS மாநாட்டிற்குப் பிரதமர் மோடி தலைமை வகிப்பது இது 2வது முறையாகும்.
BRICS என்பது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 முக்கிய நாடுகளின் ஒரு குழுவாகும்.
BRICS அமைப்பில் 2010 ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்கா இணைவதற்கு முன்பு இது BRIC என்று 4 நாடுகள் கொண்ட ஒரு அமைப்பாகவே இருந்தது.