TNPSC Thervupettagam

13வது உலக நீர் மாநாடு @ புது தில்லி

October 31 , 2019 2076 days 826 0
  • அக்டோபர் 30 ஆம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை 13வது உலக நீர் மாநாடானது புது தில்லியில் நடத்தப் பட்டு வருகின்றது.
  • மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், இந்தியர்களின் தனிநபர் நீர் தேவையில் ஏற்பட்டுள்ள கடுமையான பற்றாக்குறை குறித்து இங்கு குறிப்பிட்டார்.
  • தனிநபர் நீர்த் தேவையானது சுதந்திரம் அடைந்த போது இருந்த 5,000 கன மீட்டர் முதல் தற்போது 1,540 கன மீட்டர் வரையாக குறைந்து இருக்கின்றது.
கேப் டவுன் – எடுத்துக்காட்டு
  • சென்னை மற்றும் பெங்களூரு மட்டுமல்ல, முழு நாடும் கேப் டவுன் போல மாறக்கூடும் என்று அவர் இம்மாநாட்டில் குறிப்பிட்டார்.
  • 2017-18 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவின் தலைநகரமான கேப் டவுனில் நீர்ப் பிரச்சினை உச்சத்தில் இருந்த போது அந்நகரம் கிட்டத்தட்ட தண்ணீர் இன்றி முழுவதுமாக வறண்டு இருந்தது.
  • நீர் நுகர்வை நிர்வகிப்பதில் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதற்காக அந்த துறைமுக நகரத்தின் பெரும்பாலான குழாய்கள் அடைத்து வைக்கப் பட்டு அது “சுழிய தினம்” என்ற ஒரு கருத்தை அங்கு அறிமுகப் படுத்தியது.
இந்தியா மற்றும் இஸ்ரேல்
  • ஒரு ஆண்டுக்கு மழைப் பொழிவின் மூலம் 1,068 மிமீ மழை நீரையும் 4,000 மில்லியன் கன மீட்டர் நீரையும் இந்தியா பெறுகின்றது. ஆனால் நீர்ப் பற்றாக்குறை கொண்ட நாடாக இந்தியா விளங்குகின்றது.
  • ஒரு ஆண்டுக்கு 100 மி.மீ மழை பெறும் இஸ்ரேல் ஆனது அதிக அளவிலான தண்ணீரைக் கொண்டுள்ளது. அதன் மூலன் அந்நாடு மூல வளங்களை ஏற்றுமதி செய்கின்றது.
  • உலகில் அதிகமாக நிலத்தடி நீரைச் சார்ந்துள்ள நாடு இந்தியா ஆகும். ஆனால் இந்தியாவிடம் மொத்த நீரைத் தக்க வைத்துக் கொள்ளும் திறன் 300 மில்லியன் கன மீட்டருக்கும் குறைவாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்