1,400 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் - நல்லமலை புலிகள் காப்பகம்
June 15 , 2026 90 days 298 0
ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பரவியுள்ள நல்லமலை புலிகள் காப்பகத்தில் 25 பழமையான கல்வெட்டுகளை இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் (ASI) கல்வெட்டுப் பிரிவு ஆவணப்படுத்தி நகலெடுத்து உள்ளது.
இந்த கல்வெட்டுகள் கி.பி. (CE) 2-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 16-ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்தவை, இவை சுமார் 1,400 ஆண்டுகால வரலாற்றை உள்ளடக்கியவை.
இக்கல்வெட்டுகள் தெலுங்கு, கன்னடம், பிராகிருதம் மற்றும் பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன.
பதிவுகள் ஆனது சாதவாகனர், கீழைச் சாளுக்கியர், கல்யாணி சாளுக்கியர், பொத்தப்பி சோழர், காகதீயர், ரெட்டி மற்றும் விஜயநகர காலங்களுடன் தொடர்பு உடையவை.
கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள அலட்டம் அருகே சுமார் கி.மு. 1500-ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் பழங்கால பெருங்கற்கால மற்றும் ஆரம்ப கால வரலாற்றுப் பாறை ஓவியங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.