15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குக் குறைந்த கோதுமை கொள்முதல்
May 13 , 2022 1188 days 487 0
அரசு நிறுவனங்களின் கோதுமை கொள்முதல் அளவானது, கடந்த ஆண்டு இருந்த இது வரை இல்லாத உயர்ந்த அளவிலிருந்து, நடப்புச் சந்தைப் பருவத்தில் 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குக் குறைய உள்ளது.
இந்த முறை அரசு நிறுவனங்களால் 18.5 மில்லியன் டன்கள் அளவிலான கோதுமை கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2007-08 ஆம் ஆண்டில் 11.1 மில்லியன் டன்கள் கொள்முதல் செய்யப்பட்டப் பிறகு, மிகக் குறைவாக கொள்முதல் செய்யப்படுவது இந்த முறையே ஆகும்.
ஏற்றுமதி தேவைக்கான அதிகரிப்பானது, முக்கியமாக ரஷ்யா - உக்ரைன் போரினால் ஏற்பட்டதாகும்.
விண்ணை முட்டும் விலை உயர்வு மற்றும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தானியங்களுக்கான தேவை மேலும் அதிகரித்தது ஆகியவற்றிற்கு இந்தப் போரே காரணமாகும்.
விவசாயிகள் தற்போது ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக இலாபம் பெறுவர்.
விதைக் கருவில் ஸ்டார்ச், புரதம் மற்றும் பிற உலர் பொருட்கள் உருவாகி வரும் நிலையில் பயிர்த் தானியங்கள் முழுமையடையும் சமயத்தில் மார்ச் மாதத்தின் இரண்டாம் பாதியில் வெப்பநிலை திடீரென அதிகரித்ததன் காரணமாக விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டு உற்பத்தி குறைந்துள்ளது.