இந்த நிதியாண்டில் ஆகஸ்ட் 03 ஆம் தேதியன்று தூத்துக்குடியில் உள்ள வ.உ. சிதம்பரனார் துறைமுகம் சரக்கு கையாளுதலில் 15 மில்லியன் டன் என்ற இலக்கை எட்டியது.
முந்தைய நிதியாண்டை விட 11 நாட்கள் முன்னதாகவே இந்த மைல்கல் எட்டப் பட்டு உள்ளது.
இந்த நிதியாண்டில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை இத்துறைமுகம் 2,98,107 TEU (இருபது அடிக்குச் சமமான அலகு) கொள்கலன்களைக் கையாண்டுள்ளது.
முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில் கையாளப்பட்ட 2,71,620 TEU என்ற அளவுடன் ஒப்பிடும் போது இது 9.75% வளர்ச்சியைப் பதிவு செய்கிறது.
இந்த சாதனைக்குப் பங்களித்த முக்கியப் பொருட்களில் நிலக்கரி, சுண்ணாம்புக்கல், உப்பு, பாறை பாஸ்பேட், சமையல் எண்ணெய் மற்றும் கட்டுமானப் பொருட்கள் ஆகியவை அடங்கும்.
திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் கரூரில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியில் ஏற்பட்ட விரைவான வளர்ச்சியும் கொள்கலன் கையாளுதல் அளவை அதிகரித்து உள்ளது.
மொத்தச் சரக்குகளை கையாளுவதற்கான மூன்றாவது வடக்கு சரக்கு மண்டலத்தின் செயல்பாடு ஆனது இந்தத் துறைமுகத்தின் மேம்படுத்தப் பட்ட செயல்திறனுக்கு மற்றொரு முக்கியப் பங்களிப்பாகும்.
இது சமீபத்தில் ஜூலை 26 ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப் பட்டது.