15 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களுக்குத் தடை – பிரான்ஸ்
February 4 , 2026 198 days 224 0
15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்கான சட்டத்திற்கு பிரான்சின் தேசிய சட்டமன்றம் ஆதரவளித்துள்ளது.
இந்தச் சட்டம் அங்கு நிறைவேற்றப்பட்டால், இளம் பதின்ம வயதினர் ஸ்னாப்சாட், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் போன்ற சமூக வலைத்தளங்களை அங்கு பயன்படுத்த முடியாது.
சமூக வலைத்தளங்கள் மன ஆரோக்கியத்திற்கு ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகள் குறித்த அதிகரித்து வரும் ஆதாரங்களால் தூண்டப்பட்டு, குழந்தைகளுக்கான சமூக வலைத்தளங்களைக் கட்டுப்படுத்தும் ஒரு வளர்ந்து வரும் போக்கின் ஒரு பகுதியாக பிரான்சின் இந்த நடவடிக்கை உள்ளது.
இதே போன்ற ஒரு சட்டம் கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவிலும் நிறைவேற்றப்பட்டது.